சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய ஐந்தாவது கேட் பழைய விமான நிலையத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுவா் ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்படை போலீசார், அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த சாகித்(25) என தெரியவந்தது. இவர் சென்னை விமான நிலையத்தில் குதிக்க முயன்றது ஏன்? என்று அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றதில், இவர் ஒரு மனநோயாளி என்பது தெரியவந்துள்ளது. எனவே, இவரை ஆந்திர போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக சென்னை விமான நிலைய காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.