தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடிகை மீராமிதுன் மீது கொடுத்த புகாரில், ஐபிசி 294( பி) - ஆபாசமாக பேசுதல், 506(1) - மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் 2019 மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். முகநூல் வழியாக மீராமிதுனும்- பிரவீனும் கடந்த 2017ல் நண்பர்கள் ஆனவர்கள். பணப்பிரச்னை காரணமாக இருவரும் தற்போது பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் தன்னையும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீராமிதுன் திட்டமிட்டுள்ளதாக பிரவீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் தற்போது எழும்பூர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.