ETV Bharat / state

68 ஆயிரத்தை நெருங்கும் மருத்துவ முகாம்கள்

author img

By

Published : Nov 6, 2020, 12:32 AM IST

சென்னை: மே மாதம் முதல் நடைபெற்ற மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

68 ஆயிரத்தை நெருங்கும் மருத்துவ முகாம்கள்
68 ஆயிரத்தை நெருங்கும் மருத்துவ முகாம்கள்

சென்னையில் கரோனா வைரஸ் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது, இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 8ஆம் தேதி முதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 67 ஆயிரத்து 959 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில் 33 லட்சத்து 78 ஆயிரத்து 398 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ முகாம்களில் மேற்கொண்ட பரிசோதனை மூலம் 28 ஆயிரத்து 376 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் இன்று 382 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 49, அடையாறில் 41 மருத்துவ முகாம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற 382 மருத்துவ முகாம்களில் மொத்தம் 18 ஆயிரத்து 850 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 606 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.