ETV Bharat / state

சொத்து விவரம் குறித்து ஊடகங்கள் தவறான தகவல் வெளியீடு - கார்த்தி சிதம்பரம்

author img

By

Published : Aug 23, 2019, 3:19 PM IST

சென்னை: என்னுடைய சொத்துகள் குறித்த சில ஊடகங்கள் தவறான தகவல்களை தெரிவிக்கின்றன எனவும் அனைத்து சொத்துகளும் சட்டத்திற்கு உட்பட்டே வாங்கியுள்ளதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது சொத்து விவரம் குறித்து தவறான விவரம் தந்திருந்தால் என்னை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். என் சொத்துகள் அனைத்தும் சட்டப்படி வாங்கியவை. நான் எம்.பி. பதவிக்கு வேட்பாளராக இருந்தபோது என்னுடைய சொத்து விவரங்களை சரியாக அளித்துள்ளேன்.

கார்த்தி சிதம்பரத்தின் அறிக்கை
கார்த்தி சிதம்பரத்தின் அறிக்கை

வெளிநாடுகளில் உள்ள எனது சொத்துகள் சட்டப்பூர்வமான முறையில் வாங்கப்பட்டவை. ஆனால் சில ஊடகங்கள் எனது சொத்துகள் சட்டத்திற்கு புறம்பாக வாங்கப்பட்டவை என செய்திகள் வெளியிடுகின்றன. ஊடகங்கள் உண்மைநிலை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும். சொத்துகளை சட்டத்திற்கு புறம்பாக வாங்கியிருந்தால் வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் என்மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

Karthi Chidambaram

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.