சென்னை: மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைமையகமான தாயகத்தில் இன்று (அக்.20) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், வைகோ மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பொருளாளர் அல்லது அதற்கு நிகரான முக்கிய பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. கடந்த சில நாட்களாகவே இதுகுறித்த கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படவுள்ளது. சில மாவட்டங்களில் துரை வையாபுரிக்கு பதவி வழங்க தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக தன் மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என கூறிய வைகோ, இருப்பினும் இது தொண்டர்களின் கட்சி என்றும் அவர்களின் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
திமுகவில் வாரிசு அரசியல் உள்ளதாக கூறி அக்கட்சியில் இருந்து விலகி தனியாக மதிமுகவை தொடங்கியவர் வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பருவமழை முன்னெச்சரிக்கை - புழல் ஏரியை ஆய்வு செய்த முதலமைச்சர்!