மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18ஆம் தேதி முதல் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள தகவலில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று நடைபெற்ற கலந்தாய்வில் 551 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 393 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்விற்கு 158 மாணவர்கள் வரவில்லை.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 42 இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 10 இடங்களையும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 15 இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 26 இடங்களையும் என 93 இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
கலந்தாய்வில் இன்று பங்கேற்ற மாணவர்கள் 296 மாணவர்கள் தங்களுக்கு உரிய இடங்களை காத்திருப்பில் வைத்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 275 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 202 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 51 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 896 இடங்களும் காலியாக உள்ளன.
வரும் 11, 12, 14 ஆகிய மூன்று நாட்களில் ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.