ETV Bharat / state

தீப்பெட்டி மூலப் பொருள்களின் விலை உயர்வு: அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - தீப்பெட்டி மூலப் பொருட்களின் விலை உயர்வு குறித்து அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை உயர்வு தொடர்பாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானம்
தீர்மானம்
author img

By

Published : Apr 12, 2022, 3:31 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீப்பெட்டி தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்று (ஏப்.12) கொண்டு வந்தார்.

தீர்மானத்தின் மீது பேசிய கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, "தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கிய தொழிலாக தீப்பெட்டி தொழில் உள்ளது. தற்போது அதன் மூலப்பொருள்களின் விலை 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதால் 6 லட்சம் தொழிலாளர்கள், ஏழை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மூலப்பொருள்கள் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மெழுகு மொத்தமாக கொள்முதல்: இதற்கு பதிலளித்து பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், "தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 700க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசியில் மட்டும் 500 ஆலைகள் உள்ளன. தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக துறை அலுவலர்களுடன் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது" என்றார்.

அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

தொடர்ந்து பேசிய அமைச்சர், "அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக பொட்டாஷியம் குளேரைடு விலை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அதேபோல் மெழுகு விலை, காகித அட்டை விலையும் உயர்ந்துள்ளன. இப்பிரச்சினையை கருத்தில் கொண்டு, சிட்கோ நிறுவனத்தின் மூலம் மெழுகை மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், மற்றொரு மூலப் பொருளான காகித அட்டை இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்த தடை உத்தரவு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் வருங்காலங்களில் இறக்குமதி செய்யப்பட்டு காகித அட்டை விலை படிப்படியாக குறையும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூலப்பொருள்கள் விலையேற்றம்; தீப்பெட்டி ஆலைகள் ஏப்.17 வரை வேலைநிறுத்தம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.