சென்னை: தமிழ் திரை உலகில் கே.எஸ் ரவிக்குமாரால் நாட்டமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் மாஸ்டர் குட்டி பவானி மகேந்திரன். இவர் “தாய்க்குலமே தாய்க்குலமே”, கும்பகோணம் கோபாலு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களுக்காக, சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றார்.
குழந்தை நட்சத்திரம்
இதையடுத்து, “தேவி”, “லிட்டில் ஹார்ட்ஸ்” போன்ற தெலுங்கு திரைப்படங்களுக்காக, சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருதையும் பெற்றுள்ளார்.
மேலும் 1999ல் வந்த “மின்சார கண்ணா”, “பாட்டாளி”, “படையப்பா”, “நீ வருவாய் என” போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை இருக்கி பிடித்துக்கொண்டார். பின்னர் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து, கதாநாயகனாக உருவானார். அதாவது, பாரதி பாலகுமாரன் இயக்கத்தில், 2013 வெளிவந்த விழா திரைப்படம் மூலம் கதாநாயகராக அறிமுகமானார்.
படப்பிடிப்பு முடிவு
இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தில், சிறுவயது விஜய் சேதுபதியாக (குட்டி பவானி) நடித்து மிரட்டினார் மகேந்திரன். தனது பெயரையும் மாஸ்டர் மகேந்திரன் என்று மாற்றிக்கொண்டார்.
தற்போது மணிகாந்த் தலகுட்டி இயக்கியுள்ள “அர்த்தம்” என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் மாஸ்டர் மகேந்திரன். இதில் ஸ்ரெத்தா தாஸ் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷெரின்