சென்னை, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில் 900 கடைகள் மட்டுமே அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஏற்கனவே கடைகள் வைத்த நபர்களுக்கு 540 கடைகளும் புதிதாக கடை வைப்பவர்களுக்கு 360 கடைகளும் ஒதுக்க மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான விண்ணப்பத்தை அனைத்தும் பெறப்பட்டன.
கிட்டத்தட்ட 16 ஆயிரம் விண்ணப்பங்கள் மாநகராட்சியால் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களில் நீதிபதி முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு 540 கடைகளும் புதிதாக கடை வைப்பவர்களுக்கு 360 கடைகளும் ஒதுக்கப்படும். இந்தக் முறையை நிறுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே இருந்த கடைகளில் ஒதுக்க மாறும் மெரினா கடற்கரையில் கடை உரிமையாளர்கள் விவேகானந்தர் இல்லத்துக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ராஜி ஈடிவி பாரத்திடம் கூறுகையில்," மெரினாவில் 45 ஆண்டுகளுக்கு மேல் கடை வைத்து வருகிறோம். எந்த ஒரு உதவியும் வெளியிலிருந்து கிடைக்காது. இதற்காக மாநகராட்சி ஒரு தேர்தல் நடத்தி கடை உரிமையாளர்கள் தலைவர் என ஒருவரை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் ஒரு அட்டை ஒன்று வழங்கப்பட்டது.
இந்தத் தேர்தலினால் அனைத்து உரிமைகளும், உதவிகளும் கிடைக்கும் என மாநகராட்சி கூறியிருந்தது. ஏற்கனவே கடை வைத்து இருந்தவர்கள் அனைவரும் கடை வைத்து கொள்ளலாம். புதிதாக சில பேருக்கு மட்டுமே கடை வழங்கப்படும் என கூறியிருந்தனர். ஆனால், தற்போது ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு 540 பேருக்கு மட்டுமே கடை வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
இதை நம்பியுள்ள இரண்டாயிரம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஊரடங்கின்போது எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நாங்கள் உதவியை எதிர்பார்க்கவில்லை. ஊரடங்கு முடிந்த பின்பு எங்கள் கடைகளில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைத்து கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் மாநகராட்சி எங்களை ஏமாற்றிவிட்டது.
ஏற்கனவே கடைகள் அதிகமாக உள்ளது என கூறும் நீதிமன்றமோ, தற்போது 300 கடைகள் புதிதாக திறக்க அனுமதி வழங்கியுள்ளது. எனவே இந்த முறையை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து நடந்தால் அடுத்த கட்டமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி