ETV Bharat / state

’பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்றும் அரசு வேலை வழங்கப்படவில்லை’ - மாரியப்பன் தங்கவேலு வேதனை!

”2016ஆம் ஆண்டு இந்தியா சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், அரசு வேலை வழங்கியுள்ளன. ஆனால் எனக்கு வழங்கப்படவில்லை. இந்த முறை எனக்கு அரசு வேலை வழங்குமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். முதலமைச்சர் நிச்சயம் வழங்குவார்" - மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு பேட்டி
மாரியப்பன் தங்கவேலு பேட்டி
author img

By

Published : Sep 5, 2021, 1:45 PM IST

சென்னை: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு இன்று (செப்.05) சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டிற்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றோடு இந்தப் போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை இல்லாத அளவில் தற்போது வரை இந்தியாவிற்கு 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 54 வீரர்களும் ஒன்பது வீராங்கனைகளும் பங்கேற்கேற்றுள்ளனர்.

2ஆவது முறையாக பதக்கம்

இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் 2ஆவது முறையாக பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். கடந்த முறை 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார். தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மாரியப்பன் தங்கவேலு பேட்டி

மா. சுப்பிரமணியன் வாழ்த்து

டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அவருக்கு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக செப்.3ஆம் தேதி டெல்லியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரியப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அரசு வேலை வழங்க கோரிக்கை

இந்நிலையில், முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், "தங்கப் பதக்கத்தை இலக்காக வைத்து சென்றேன். அங்கு மழை காரணமாக சிரமப்பட்டேன். அதனால் வெள்ளிப் பதக்கமே வெல்ல முடிந்ததது. 2024ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”2016ஆம் ஆண்டு இந்தியா சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், அரசு வேலை வழங்கியுள்ளன. ஆனால் எனக்கு வழங்கப்படவில்லை. இந்த முறை எனக்கு அரசு வேலை வழங்குமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். முதலமைச்சர் நிச்சயம் வழங்குவார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: PARALYMPICS: இந்தியாவுக்கு 5ஆவது தங்கம்; அசத்திய கிருஷ்ணா நாகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.