அரசாணையில், '2019-20ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 2,423 கௌரவ விரிவுரையாளர்களில் 2,120 பேருக்கு பணிக்காலத்தில் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டது.
இதனால் மீதமிருந்த 303 கௌரவ விரிவுரையாளர்கள், பணி நியமன அனுமதி கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு மீதமிருக்கும் 303 கௌரவ விரிவுரையாளர்களையும் தற்காலிகமாக பணி நியமனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்த நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள, விதிகளின்படி அவசர, அவசிய தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 303 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வராததால், தாங்கள் பணியில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளில் மதம், சாதி ரீதியாக மாணவர்களை ஒன்றிணைக்க நினைத்தால் நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை