சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது இளம்பெண் ஒருவர் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் 41 வயதான அஸ்வின் விக்னேஷ் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் 28 வயதான இளம்பெண்ணுக்கு காதல் என்ற பெயரில் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பணியிலிருந்து நின்றுவிட்டார். இந்நிலையில் அவரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு அஸ்வின் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.
இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து அஸ்வினை கைது செய்து விசாரணை நடத்தி, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அஸ்வின் அலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஆபாசப் படங்கள் இருந்தது தெரியவந்தது.