ETV Bharat / state

சிறுநீரகப் பிரச்னை காரணமாக உயிரிழந்தவருக்கு கரோனா!

சென்னை: சிறுநீரகப் பிரச்னை காரணமாக உயிரிழந்த நபருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

corona virus
corona virus
author img

By

Published : Apr 28, 2020, 10:37 PM IST

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவர், நீண்ட நாட்களாகச் சிறுநீரகப் பிரச்னை, மூச்சு விடுவதில் சிரமத்துடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் கடந்த 27ஆம் தேதி முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இன்று காலை முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, வெளியான பரிசோதனை முடிவுகளில் பெரியவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதியாகியுள்ளது. ஆனால், அவர் உயிருடன் இருந்தபோது கரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த முதியவருக்கு மனைவி, திருமணமாகிய மகன் உள்ளனர்.

இதையும் படிங்க : பெண் லீலை மன்னன் நாகர்கோவில் காசி மீது குண்டர் சட்டம் பாய்கிறது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.