ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது!

சென்னை: பள்ளி மணவிக்கு பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

sexual Harassment
sexual Harassment
author img

By

Published : May 22, 2021, 7:40 AM IST

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிஒருவர் மே 19ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனை செய்ததில், மாணவி கருத்தரித்து கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு கரு கலைந்து உள்ளது தெரிந்தது.

இதுகுறித்து மாணவியின் தயாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த தாயார் மாணவியிடம் விசாரித்துள்ளார். பிப்ரவரி மாதம் உறவினர் ஒருவரது வீட்டு கிரகபிரவேஷம் நிகழ்வுக்கு சென்றிருந்திருந்த போது, எதிர்வீட்டில் குடும்பத்துடன் வசித்த, பெயிண்டராக வேலை செய்து வரும் அரவிந்தன்(24) தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்புணர்வு செய்தாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாணவியின் தாயார் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பொன்னேரி மகிளா நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.