சென்னை : குவைத் ஏா்லைன்ஸ் விமானம் அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுறிமை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முனிய செல்வம் (37) என்பவரின் பாஸ்போா்ட்டை அலுவலர்கள் சோதனையிட்டனர். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஓட்டுநர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றவர், அங்கிருந்து இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஏமன்நாட்டிற்கு சென்று, அங்கு சில மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் குடியுரிமை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனக்கு ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது தெரியாது என்று தெரிவித்தார்.
மேலும் சவுதி அரேபியா நாட்டில், தான் வேலை செய்த நிறுவனம் கூறியதால் ஏமன் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை குடியுரிமை அலுவலர்கள் கைது செய்தனர். பின்னர் அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை