ETV Bharat / state

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! - male corpse in rotten condition

சென்னை: தாம்பரம் பகுதியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில், ஆண் சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rotten dead body
male corpse in locked house
author img

By

Published : Dec 17, 2020, 9:15 PM IST

சென்னை - தாம்பரம் அடுத்த செம்பாக்கம் ஐய்யபன் நகரைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (45), மென் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி ஜெயசித்ரா (42), இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று (டிச. 17) பிரின்ஸ் வசித்து வரும் இல்லத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் சேலையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் வந்த காவல் துறையினர், உள்பக்கம் பூட்டி இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கழிவறையில் உடல் முழுவதும் அழுகிய நிலையில், பிரின்ஸ் சடலமாக கிடந்துள்ளார். மேலும் இவருடைய சகோதரர் காவலர் பயிற்சி மையத்தில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வருவதால், அவருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் உயிரிழந்து மூன்று நாட்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மரித்துப்போன மனிதநேயம், ஓங்கோல் படுகொலை: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.