ETV Bharat / state

ப்ரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் காலமானார்! - கேரள இயக்குநர் மரணம்

நடிகர் விஜயை வைத்து 'ப்ரண்ட்ஸ்', 'காவலன்' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் காலமானார்.

இயக்குநர் சித்திக் காலமானார்
இயக்குநர் சித்திக் காலமானார்
author img

By

Published : Aug 8, 2023, 10:12 PM IST

சென்னை: கேரளாவைச் சேர்ந்தவரான இயக்குநர் சித்திக், 1986ஆம் ஆண்டு 'பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ' என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் 'நாடோடிக்காட்டு' என்கிற படத்தை இயக்கினார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் இயக்குநராகவும் மாறினார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் இவர் இயக்கிய படங்கள் காமெடியில் கலக்கிய படங்களாக அமைந்தன. அதுமட்டுமின்றி சென்ட்டிமென்ட் காட்சிகளுடன் கூடிய கமர்சியல் படங்களை இயக்குவதில் சித்திக் வல்லவர். இவர் தமிழில் நடிகர் விஜயை வைத்து, 'ப்ரண்ட்ஸ்' மற்றும் 'காவலன்' படத்தை இயக்கினார்.

'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் இன்று வரையும் ரசிகர்கள் உட்பட பல மக்களின் விருப்ப பட்டியலில் உள்ளது. அதில் இடம் பெற்று இருக்கும் வடிவேலுவின் "நேசமணி" என்ற கதாபாத்திரம் தற்போதைய 2k-கிட்ஸ்கள் வரை பிரபலமானது. இதில் விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவரும் இணைந்து நடித்திருப்பர்.

'காவலன்" படத்திலும் வடிவேலுவின் காமெடி பேசப்பட்டது. அதேபோல் விஜயகாந்த் - பிரபு தேவா நடிப்பில் வெளியான, சூப்பர் ஹிட் படமான 'எங்கள் அண்ணா' படத்தையும் சித்திக் இயக்கியுள்ளார். அந்தப் படமும் காமெடியில் பெரிதளவில் பேசப்பட்டது. கடைசியாக தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படத்தை இயக்கி இருந்தார், பிரபல இயக்குநர் சித்திக்.

அதேபோல் மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளியான 'பிக் பிரதர்' படத்தை இயக்கினார். அந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சித்திக் நிமோனியா மற்றும் கல்லீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மூன்று மணியளவில், அவருக்கு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது இயக்குநர் சித்திக் காலமாகிவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சித்திக்கின் மரண செய்தி சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது இரங்லைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 'அங்காடித்தெரு' நடிகை சிந்து உயிரிழந்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.