ETV Bharat / state

மகளிர் உரிமைத் தொகை: இதுவரை எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் தெரியுமா? - chennai news in tamil

Magalir urimai thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author img

By

Published : Aug 18, 2023, 12:00 PM IST

சென்னை: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 24 அன்று தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு உள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க: வாக்குச்சாவடி பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி!

இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அப்போது விண்ணப்பத்தாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேற்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விண்ணப்பங்கள் பெறுதல், கள ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆன்லைனில் இலவச மருத்துவ ஆலோசனை; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் புதிய அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.