ETV Bharat / state

இலவச வீட்டுமனை கோரியவருக்கு நிலம் வழங்க உத்தரவு...!

மதுரை: இலவச வீட்டுமனை கோரியவருக்கு நிலம் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இலவச வீட்டுமனை கோரியவருக்கு நிலம் வழங்க உத்தரவு...!
இலவச வீட்டுமனை கோரியவருக்கு நிலம் வழங்க உத்தரவு...!
author img

By

Published : Oct 10, 2020, 11:42 AM IST

சிவகங்கை மாவட்டம் பையூரைச் சேர்ந்த சக்திவேல், நிலமற்ற ஏழைகளுக்கான இலவச வீட்டு மனைத் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டது போக, சம்பந்தப்பட்ட பகுதியில் தலா 2 சென்ட் வீதம் 284 பிளாட்டுகள் உள்ளன. இதிலிருந்து மனுதாரருக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டது.

இதையடுத்து “இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னாளில், மனுதாரருக்கு ஏதேனும் நிலம் இருப்பது தெரியவந்தால், பட்டாவை ரத்து செய்யலாம். ஒருவேளை வீடு கட்டியிருந்தால் வீட்டிற்கான மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...வீணாகும் வெள்ள நீரில் நெல் உற்பத்தி செய்யலாம் - சி பொன்னையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.