ETV Bharat / state

மதுரையில் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கும் நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றம் தள்ளுபடி
author img

By

Published : Mar 22, 2019, 7:37 PM IST

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில், மதுரையில் சித்திரைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கூடும் போது, தேர்தல் நடத்துவது வாக்குப்பதிவை பாதிக்கும் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்மீதான விசாரணையில், திருவிழாவை தள்ளி வைக்க முடியாது என்று கோவில் நிர்வாகமும், தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும் பதில் மனுக்கள் தாக்கல் செய்தது.

மதுரை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய 3 மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடைபெறவுள்ள சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரும் வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.

வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் செய்ததிலிருந்து மதுரையில் நடைபெறவுள்ள சித்திரைத் திருவிழா குறித்த ஏற்பாடுகளோடு தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் எவ்வாறு செய்ய முடியும்? என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், 'மதுரையில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி, தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுவதால் அன்று பொதுமக்கள் யாரும் ஓட்டுபோட முடியாது. அதனால், தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்கவேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஏப்ரல் 18-ஆம் தேதி பெரிய வியாழன் என்பதால், அன்று கிறிஸ்தவர்களால் ஓட்டுப்போட வரமுடியாது. மேலும், தேவாலயங்களுடன் பள்ளிக்கூடங்களும் இருப்பதால், அங்கு தேர்தல் நடத்தப்படும்போது வழிபாடு செய்யவும் பாதிப்பு ஏற்படும். அதனால், தேர்தலை தள்ளிவைக்கவேண்டும்' என்று கூறியிருந்தனர்.

மேற்கண்ட இரு மனுக்களும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேர்தல் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முறையாக நடத்த பக்தர்களுக்கான இலவச வினியோகங்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பெரிய வியாழன் தினத்தை அனுசரிப்பதற்கு தேர்தல் எவ்விதத்திலும் இடையூறாக இருக்காது. வாக்குச்சாவடி மையங்களில் உள்ள தேவாலயங்களுக்கு வந்து செல்வதற்காக பிரத்யேகமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, இவ்விரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.