சென்னை விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இன்று(நவ-3) மதுரை, கோவை இடையேயான 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடா்மழை காரணமாகப் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் சென்னை புறநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்கள் இடைவிடாமல் பெருமழை பெய்த காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ-3) பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் மதுரை, கோவை ஆகிய நான்கு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு கோவை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உட்பட இரண்டு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.
மேலும் மதுரையில் இருந்து பகல் 12:45 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5:15 மணிக்கு கோவையிலிருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டன.
எனவே, இன்று(நவ-3) ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் மதுரை, கோவை இடையே இயக்கப்படும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வேட்டி அணிந்ததால் டெல்லியில் தாக்குதலுக்குள்ளான கேரள மாணவர்கள் - நீதி கேட்ட எம்.பி.