ETV Bharat / state

சென்னை பல்கலை. அவுட்சோர்சிங்கில் 439 பேர் நியமனம்: இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? - சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவுட்சோர்சிங்கில் 439 பேர் நியமனம்

சென்னை பல்கலைக்கழகத்தில் அவுட்சோர்சிங்கில் 439 பணியாளர்களைத் தேர்வுசெய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு நேரடியாக அரசு வேலை கிடைக்குமா? என்பது குறித்துப் பார்க்கலாம்.

அவுட்சோர்சிங்கில் நியமனம்
அவுட்சோர்சிங்கில் நியமனம்
author img

By

Published : Jan 19, 2022, 7:16 PM IST

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் அவுட்சோர்சிங் மூலம் தனியார் நிறுவனத்திலிருந்து 439 பணியாளர்களைத் தேர்வுசெய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனால் படித்த இளைஞர்கள் மீண்டும் தனியார் நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

வேலைவாய்ப்பு

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் தமிழ்நாடு இளைஞர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

அவுட்சோர்சிங்கில் நியமனம்
அவுட்சோர்சிங்கில் நியமனம்

அரசு வேலை

மேலும் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிசெய்த அதிமுக அரசின் தொலைநோக்குச் சிந்தனையில்லாமை, நிர்வாகத் திறன் இல்லாமையால் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள 3,000-க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் பட்டயம், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார் எட்டு லட்சம் மாணவர்கள் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர்.

அவுட்சோர்சிங்கில் நியமனம்
அவுட்சோர்சிங்கில் நியமனம்

ஐம்பது லட்சம் வேலை வாய்ப்பு

மேலும், சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் பல்வேறு கல்வி நிலையில் தேர்ச்சி பெறுவதில்லை. ஆகவே, கருணாநிதி வழியில் அமையவிருக்கின்ற திமுக அரசு தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு 2020-2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2025-26 ஆம் ஆண்டு வரை ஐம்பது லட்சம் வேலை வாய்ப்புகளைத் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வழங்கிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும்.

இந்த மாபெரும் திட்டத்தினைத் திறம்பட நிறைவேற்றிட மாநிலத் திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு உருவாக்க அமைப்பு எனப்படும் நிறுவனம் உருவாக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது.

அலுவலக உதவியாளர் பணி

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர், தட்டச்சர், உதவி எழுத்தர், கணினி இயக்குபவர், டேட்டா என்டரி ஆப்ரேட்டர், எலக்ட்ரீசியன், நூலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையில் 439 பேர் நியமனம் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரியுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு ஆட்களை அளிக்கும் நிறுவனங்கள் 21ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், பிப்ரவரி 11ஆம் தேதி இறுதிச்செய்யப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பணியாளர்களை அளிக்கும் நிறுவனம் 1800 பணியாளர்களை அரசுத் துறைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அளிக்கும் திறன் படைத்திருக்க வேண்டும். தேர்வுசெய்யப்படும் நிறுவனம் சிண்டிகேட் கூட்டத்தில் வைத்து அனுமதி வழங்கப்படும்.

கல்வித் தகுதி

இந்தப் பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் வரை கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். பொறியியல் மாணவர்களுக்கு தினமும் 612 ரூபாய் கூலியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொகுப்பூதியத்தில் 27 பணியிடங்களை நிரப்பவும் ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கெளரியிடம் கேட்டபோது, "பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையைத்தான் மேற்கொண்டுவருகிறோம். புதியதாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: செம்மண் கடத்தலில் திமுக பிரமுகர் - நடவடிக்கை எடுக்க விவசாயி கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.