ETV Bharat / state

புதிய கல்வி கொள்கை மூலம் தரமான கல்வி - சென்னை ஐஐடி இயக்குனர் பெருமிதம்! - G20 summit

சென்னை ஐஐடியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டின் கல்விசார் கருத்தரங்கில், நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆயுதமாக கல்விதான் உள்ளது என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியுள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆயுதமாக கல்விதான் உள்ளது - ஐஐடி இயக்குனர் காமகோடி

author img

By

Published : Jan 31, 2023, 12:58 PM IST

சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்த நிலையில், ஜி 20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு கல்லூரி மாணவர்கள், ஐஐடி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என 900 பேர் கலந்து கொள்ளும் வகையில் கல்விசார் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் இன்று (ஜன.31) முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதன் முதல் நாளான இன்று "கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் ஒவ்வொரு நாடுகள் பாடத்திட்டங்கள், செயல்பாடுகள், நடைமுறைகள் குறித்தும், திறன் மேம்பாடு குறித்தும் பேச உள்ளனர்.

இந்த கருத்தரங்கத்திற்கு மத்திய அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி தலைமை தாங்குகிறார். அனைவருக்கும் எளிதில் அணுகவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான கல்வியை அளிப்பதற்கு ஜி 20 உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசினார்.

அப்போது பேசிய அவர், “ஆஸ்திரேலியா, சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் டிஜிட்டல் கல்வியில் சிறந்து விளங்குகிறது. பிரான்சில் ஆங்கிலத்தில் பாடம் நடத்தினாலும், பிரான்ஸ் மொழியில் மொழி பெயர்க்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக அந்த நாடு பெரும் தொகையை செலவழிக்கிறது.

சீனா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் விர்ச்சுவல் டிஜிட்டல் வகுப்பறைகளை அதிக அளவில் உருவாக்கி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் அந்த நாடுகளில் அனைவருக்கும் கல்வி தங்கு தடை இன்றி வழங்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளும் தங்களது கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன.

கரோனா பெருந்தொற்று கல்விக்கு பெரும் சவாலாக இருந்தது. அந்த நேரத்தில் அனைவருக்கும் கல்வி வழங்கும் கருவியாக தொழில்நுட்பம் டிஜிட்டல் மட்டுமே விளங்கியது. இங்கிலாந்து நாட்டில் ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்துவதற்கு பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. சீனா 20,000க்கும் அதிகமான உயர் கல்வி பாடத்திட்டங்களை கொண்டதாக உள்ளது.

உயர்கல்வி படிக்கும் தளமாக சீனா மாறி வருகிறது. நெதர்லாந்து அதிக அளவில் மென்பொருள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பிரான்ஸ் தொழில் முனைவோர் தொடர்பான கருத்தரங்கு பயிற்சி வகுப்புகளை அதிக அளவில் நடத்தி வருகிறது. இந்தியா பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கி வருகிறது.

தொழில்நுட்பக் கல்வி மையமாக இந்தியா மாறி வருகிறது. பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் சுயநிதி கல்லூரிகளாக உள்ளன. அதனால் அனைவருக்கும் கல்வி சென்று சேர்வதில் சிரமம் உள்ளது. ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஸ்மார்ட் எஜுகேஷன் திட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.

அதிக அளவில் கல்வியை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றன. நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும் டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்து வருகின்றன. அதேபோல் இந்தியா புதிய கல்விக் கொள்கை மூலம் அனைவருக்கும் சமமான தரமான கல்வியை கொடுத்து வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு போன்றவை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஸ்டார்ட்-அப் பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆத்ம நிர்பான் திட்டத்தின் படி தரவு அறிவியலுடன் அடிப்படையில் தொழில் முனைவோரை உருவாக்கி வருகிறோம்.

‘எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு’ என்பதற்கிணங்க என்னும் எழுத்தும்தான் கல்வியை மேம்படுத்தும். இந்த கருத்தரங்கு ஜி 20 உறுப்பு நாடுகளிடையே பேரார்வத்தை உருவாக்கி உள்ளது. பள்ளிக்கல்வி, உயர் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் தங்களின் மிகச் சிறந்த நடைமுறைகளை எடுத்துரைக்கும் உள்ளீடுகளை 15 நாடுகள் அனுப்பி இருக்கிறது.

2 மாதங்களுக்கு முன்பு இதில் கலந்து கொள்ள உள்ள அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைத்தோம். சரியான இடைவெளியில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். சீனா தரமான கல்வித் தரத்தைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆயுதமாக கல்விதான் உள்ளது” என்றார்.

முன்னதாக பேசிய கல்வித்துறை செயலாளர் சஞ்சய், “நம் நாட்டில் படித்தவர்கள் அதிகம் இருந்தாலும், தொழில் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய இடைவெளி உள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம், இதனை குறைக்க உதவும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நல்ல முன்னெடுப்புதான். ஆனால் அதனை பாகுபாடின்றி கிராமம், நகரம் என்று அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என கூறினார்.

மேலும் மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை கற்போருக்கு எளிதில் அணுகக் கூடிய மற்றும் சமமான கல்வி வழங்குதல், உயர் தரமான உயர் கல்வி கற்றல் வாய்ப்புகளை விரிவாக்குதல், திறன் கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவை பற்றி இன்றைய கருத்தரங்கில் 3 அமர்வுகளில் விவாதிக்கப்படுகிறது.

இந்த ஒரு நாள் நிகழ்வில் 19 நாடுகளைச் சேர்ந்த 69 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மேலும் சென்னை ஐஐடியின் வரலாறு, தொலைநோக்கு, திட்டம், இயக்கம் ஆகியவற்றை ஆடியோ வழியாக எடுத்துரைத்தல், பாரம்பரிய மையம், புதிய கண்டுபிடிப்புக்கான மையம், அறிவுசார் மையம் ஆகிய சிறப்புமிக்க 3 மையங்களை பார்வையிடுதல் ஆகியவையும் இந்நாளில் இடம் பெறுகிறது.

இதையும் படிங்க: தேசியக் கல்வி கொள்கையால் மட்டுமே இலக்கை அடைய முடியும் - ஆளுநர் ஆர்.என். ரவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.