ETV Bharat / state

ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் இயங்குகிறதா? - தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஆணை!

author img

By

Published : Feb 14, 2023, 6:58 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் பாம்பு கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் விவசாயி பலியானதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷப்பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு - தமிழ்நாடு அரசுக்கு பறந்த உத்தரவு!

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த அருணா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது கணவரான முரளிக்கு மணலி கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி பிற்பகல், எனது கணவர் விவசாய நிலத்துக்குச் சென்றார்.

அங்கு அவரை விஷப்பாம்பு கடித்ததால், உடனடியாக கண்ணன் கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாலை 4 மணியளவில் அழைத்துச் சென்றோம். அப்போது அங்கு இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெறிநாய்க்கடி, பாம்பு கடிக்கு விஷமுறிவு ஊசி போடப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாங்கள் சென்றபோது ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டு, ஒருவரும் அங்கு இல்லை. சுகாதார நிலையம் வெளியே நின்றிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர், எங்களை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தினார். இதனையடுத்து என்னுடைய கணவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். கண்ணன் கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து இருந்திருந்தால், எனது கணவர் உயிர் பிழைத்திருப்பார். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நேரமானதால், உடல் முழுவதும் விஷம் பரவி அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

ஆரம்பத்திலேயே அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்திருந்தால், என்னுடைய கணவரை காப்பாற்றி இருக்கலாம். 24 மணி நேரம் செயல்படும் என்று அறிவித்த ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டிருந்ததால், என்னுடைய கணவரை காப்பாற்ற முடியாமல் போனது.

மருத்துவ கவனக்குறைவு காரணமாக என்னுடைய கணவர் பலியாகி உள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். எனது கணவர் மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும். எங்களுடைய இரண்டு பிள்ளைகளின் கல்வி ஆகியவற்றிற்கும் உரிய பலன்களை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் விஜய், ‘இந்த மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும்’ என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி அனிதா சுமந்த், ‘சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சம்பவம் நடந்த அன்று இயங்கியதா அல்லது பூட்டப்பட்டிருந்ததா என்பது குறித்தும், ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் உரிய மருத்துவர் உடன் இயங்குகிறதா? மருத்துவமனை அருகில் கண்காணிப்பு கேமரா ஏதாவது உள்ளதா? என்பது குறித்தும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'நோய்வாய்ப்பட்ட சமூகத்தையும், தீங்கு விளைவிக்கும் கலாசாரத்தையும் போதைப்பொருட்கள் உருவாக்கியுள்ளன'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.