ETV Bharat / state

TET Exam: டெட் தேர்வு கட்டாயமில்லை.. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

author img

By

Published : Jun 2, 2023, 12:31 PM IST

2011ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TET: டெட் தேர்வு கட்டாயமில்லை.. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011இல் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், 2011ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது.

மேலும், ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என தீர்ப்பு அளித்துள்ளனர். அதேபோல், நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வு கட்டாயம் என தெளிவுபடுத்தி உள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கக் கூடிய ஆசிரியர்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் (TET) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வானது இரண்டு தாள்களைக் கொண்டது.

அதில், முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ஆம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 2010ஆம் ஆண்டு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பாடங்களை எடுக்கக் கூடிய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்; இ-சேவை மையத்தை அணுக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.