ETV Bharat / state

“சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுப்பது முக்கியமானது” - சென்னை உயர் நீதிமன்றம் - தமிழக அரசு

Banners: விபத்து ஏதும் நடந்த பின்னர் விதிமீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விட, சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவதை தடுப்பது முக்கியமானது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 6:51 AM IST

சென்னை: சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்குகளும், விழுப்புரத்தில் திமுக நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக்கம்பம் நாட்டியபோது, 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பான வழக்கும், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு நேற்று (அக்.5) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழ்நாடு அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது எனவும், பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், டிராபிக் ராமசாமி இறந்து விட்டதால், அவருக்குப் பதில் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி வழக்கறிஞர் அரவிந்த் மனுத் தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், விபத்து ஏதும் நடந்த பின்னர் விதி மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விட, சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவதை தடுப்பது முக்கியமானது எனத் தெரிவித்தனர்.

மேலும், சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுக்க மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் என்ன நடைமுறையை பின்பற்றுகின்றன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும்போது, உரிய சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சாதிவாரி மக்கள்தொகை கணக்கொடுப்பு விவகாரத்தில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.