ETV Bharat / state

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் உதவி  காவல் ஆணையருக்கு ஜாமீன் மறுப்பு - தொழிலதிபர் ராஜேஷ் கடத்தி சென்று சொத்துக்களை எழுதி வாங்கியதாகச் சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார்

தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை உதவி ஆணையர் கோரிய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

madras High Court has dismissed  bail petition of  AC sivakumar  for alleged cheating businessman property தொழிலதிபர் கடத்தல் வழக்கு : உதவி ஆணையரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி  சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Apr 15, 2022, 10:17 AM IST

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷை கடத்திச் சென்று, துன்புறுத்தி அவரது சொத்துக்களை மூன்றாம் நபர் பெயருக்கு எழுதி வாங்கியதாகச் சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டிய ராஜன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி ஆணையர் சிவகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று (ஏப்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், "இந்த ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மனுதாரரே முக்கிய நபராகச் செயல்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நாளில் இருந்து மனுதாரர் சிவகுமார் தலைமறைவாக உள்ளார்.

சிவகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர் தரப்பில், "இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கும், புகார்தாரருக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டது. அதனடிப்படையில், வழக்கை ரத்து செய்ய கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளோம். எனவே, உதவி ஆணையர் சிவகுமாருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரர் சிவக்குமாருக்கு எதிராகப் புகார்தாரர் முக்கிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

தற்போது, இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது என்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து மனுதாரரை விடுவிக்க முடியாது. ஒரு மூத்த காவல் அதிகாரியான மனுதாரர் தலைமறைவாகி இருப்பதன் மூலம் அவரது உள்நோக்கம் என்னவென்று வெளிப்படுகிறது. இவரை முன்ஜாமீனில் விட்டால், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டார். எனவே, அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்" என்றார்

இதையும் படிங்க:சாதிப்பாரா ஷகில் அக்தர் ?-ராமஜெயம் வழக்கில் மீண்டும் விறுவிறுப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.