ETV Bharat / state

'சொற்ப தொகையை கொடுத்து மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தாதீங்க' - அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி - பார்வை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை குறித்து நீதிமன்றம் அதிப்தி

சொற்ப அளவிலான உதவித் தொகை வழங்கி பார்வை மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்துவதை விட, அதையும் நிறுத்திவிடுங்கள் என தமிழக சமூக நலத்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

author img

By

Published : Apr 18, 2022, 8:31 PM IST

சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்கக் கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு 2018இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று(ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது.

அப்போது, பார்வை மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டனர்.

மேலும், தற்போதைய விலைவாசியை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆயிரம் ரூபாய், 1500 ரூபாய் என உதவித்தொகை வழங்குவதற்கு பதில், அவற்றை நிறுத்தி விடலாம் எனவும், இந்த சொற்ப தொகையை கொடுத்து பார்வை மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தக் கூடாது எனவும் அதிருப்தி தெரிவித்தனர். அந்த தொகை எவ்வாறு போதுமானதாக இருக்கும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழக சமூக நலத்துறை செயலாளர் அப்பதவியில் நீடிக்க தகுதியில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் பயணிப்போர் மீது நடவடிக்கை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.