ETV Bharat / state

'வேலையில்லா பட்டதாரி'யில் புகைப்பிடித்த விவகாரம் - நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
வேலையில்லா பட்டதாரி
author img

By

Published : Jul 10, 2023, 12:48 PM IST

Updated : Jul 10, 2023, 1:27 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் நடித்த "வேலையில்லா பட்டதாரி" திரைப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள், விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய "எச்சரிக்கை வாசகம்" உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு, ஜூலை 25ஆம் தேதி தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், சைதாப்பேட்டையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இருவரும் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்குத் தடை விதித்தும் கடந்த மார்ச் 29ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று(ஜூலை 10) நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், 2003ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம் விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், விநியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிட்டார்.

திரைப்படத்தில் வரும் காட்சிக்கு மத்திய தணிக்கை வாரியம் சான்றளித்துள்ளதாகவும், வழக்குத் தொடர்வதற்கு முன்பு விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் மனுதாரருக்கு வழங்கவில்லை என்பதால், தங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

அப்போது, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில், தங்கள் வழக்கை ரத்து செய்யக் கோரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மனுக்களை ஏற்கக் கூடாது என்றும், அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தல தோனி‌ வெளியிடும் ‘எல்ஜிஎம்’ படத்தின் ட்ரெய்லர்!

Last Updated : Jul 10, 2023, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.