ETV Bharat / state

மாயாஜால் நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவு; விசாரணைக்கு எதிரான மனு தள்ளுபடி! - Mayajaal land Patta issue

Mayajaal land Patta issue: மாயாஜால் நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிராக நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் தாமாக முன்வந்து விசாரணை நடத்த பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து மாயாஜால் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 7:34 PM IST

சென்னை: சென்னையை அடுத்த கானத்தூர் ரெட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்துக்கு, மாயாஜால் நிறுவனத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிராக, தாமாக முன் வந்து விசாரணை நடத்துவது தொடர்பாக நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி, மாயாஜால் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (Mayajaal Entertainment Company) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், கடந்த 1999ஆம் ஆண்டு நிலத்தை வாங்கியதாக கூறும் மாயாஜால் நிறுவனம், அதற்கு பட்டா கோரி விண்ணப்பிக்கவில்லை.

மாறாக, 2003ஆம் ஆண்டு நிலத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கோரி, மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்ததால், அந்த நிலம் அரசு நிலமாகவே கருத வேண்டும் எனக் கூறி, நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரின் நடவடிக்கையில் தலையிட எந்த காரணமும் இல்லை என மாயாஜால் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தாமாக முன்வந்து எடுத்த விசாரணையைத் தொடர ஏதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Asian Games 2023: பாய்மர படகு போட்டியில் அசத்திய அண்ணன் - தங்கை.. வேலூர் விஷ்ணு சரவணனுக்கு குவியும் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.