சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி ஹைரோட்டில் வசித்து வருபவர் பரேஷ் அஜ்மீரா (வயது 55). இவர் சொந்தமாக சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவில் கணினி பழுதுபார்க்கும் கடை ஒன்றை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளும் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டிருப்பதால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கரோனா தொற்று சென்னையில் வேகமாகப் பரவி வருவதால் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோம் எனும் அச்சத்தில் கடந்த சில நாட்களாக, இவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மதியம் திடீரென தனது கடை இருக்கும் கட்டடத்தின் இரண்டாவது தளத்திற்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்த பரேஷ் அஜ்மீரா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: சிறுவனை கடித்துக் குதறும் வெறிநாய் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ