ETV Bharat / state

ஓமனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ஓமன் நாட்டின் மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக்கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Aug 6, 2022, 8:16 AM IST

சென்னை: ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், அங்கு சரியாக ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

எனவே மீனவர்களின் அவலநிலையைக் குறிப்பிட்டு, அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 6 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடம் மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.