ETV Bharat / state

"கடைத் தெருவுக்குச் சென்று கட்டாய வசூல் செய்தது கிடையாது" - யாரைக் குறிப்பிடுகிறார் வைகோ? - எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தருகிறாரா

சென்னை: மதிமுக மாவட்டச் செயலாளர் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்ததனால் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
author img

By

Published : Sep 17, 2019, 7:35 PM IST

Updated : Sep 17, 2019, 8:53 PM IST

பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, பெரியார் பிறந்தநாளாகிய இந்த தன்மான திருநாளில் அவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு பெரியார் பாதுகாத்து வந்த சுயமரியாதை, சமூகநீதியைக் காக்க நாங்கள் உறுதி ஏற்கிறோம்.

மதிமுக இயக்கம் தொடங்கியதிலிருந்து துளியளவும் வன்முறையில் ஈடுபட்டதில்லை. அதேபோல் எந்த கடைத் தெருவுக்கும் சென்று கட்டாய வசூல் செய்தது கிடையாது. நான் 30 முறை கைதாகி இருக்கிறேன். எந்த இடத்திலும் ஒரு முறை கூட ஒரு பேருந்தின் மீதும் கல் வீசியது கிடையாது. நாங்கள் வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்கி காவல்துறையினரிடம் மோதிக் கொண்டதும் இல்லை. அப்படியிருக்கையில் மாநாட்டு வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த கொடிகளை மாநாகராட்சி பணியாளர்கள் அகற்றுகின்ற போது மதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதாக ஒரு ஆங்கில பத்திரிகை கூறுகிறது.

நடைபெற்ற மாநாட்டில் பந்தலுக்கு போகின்ற வழியில் உள்ள கொடிமரங்களை மாநாகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். இதை யார் தான் சகிப்பார்கள். இதனால் அங்கிருந்த தொண்டர்கள் ஆத்திரமடைந்து அவர்களைத் தடுத்துள்ளனர். கொடி அவனுக்கு உயிர். அதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் எங்கள் தோழர் ஒருவருடைய இடது தோள்பட்டை உடைந்து அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இதையறிந்த சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சைதை சுப்ரமணி கைகலப்பை விலக்கி சென்று விட சென்றுள்ளார். அப்படி சென்றவரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுகுறித்து நான் விசாரித்ததில் மேலிடத்தின் அழுத்தம் என்றே சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி கொடுக்கின்ற அழுத்தமா இதற்குக் காரணம். இதைக் கண்டித்து எங்கள் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் அமைதி வழியில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இதில் கடைத்தெருவுக்குச் சென்று உண்டியல் ஏந்தி, பணம்பெற்று பல்வேறு கட்சிகள் மக்களுக்காக அரசியல் செய்கின்றன. இந்நிலையில் வைகோ யாரைக் குறிப்பிடுகிறார் , எந்தக்கட்சியைக் குறிப்பிடுகிறார் எனத்தெரியவில்லை தொண்டர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இதையும் படிங்க:

காஷ்மீர் அரசின் வாயை திறக்கவைத்த வைகோவின் மனு - ஃபரூக்கின் நிலை என்ன?

Intro:

Body:Script sent in WRAP

Conclusion:
Last Updated : Sep 17, 2019, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.