ETV Bharat / state

கோவிட்-19க்கு எதிரான போர்: அரசுடன் கைக்கோர்த்த லயோலா - அரசுடன் கைக்கோர்த்துள்ள லயோலா கல்லூரி

சென்னை : கோவிட்-19 ஊரடங்கு தனிமைப்படுத்தலில் மன ரீதியாக பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்களுக்கு லயோலா கல்லூரி கவுன்சிலிங் மையம் ஆலோசனை வழங்க இருக்கிறது.

counselling centrecounselling centre
counselling centrecounselling centre
author img

By

Published : Apr 8, 2020, 10:18 AM IST

கரோனா வைரஸ் பலருக்கு மன அழுத்தம் கொடுப்பதால் அதை சமாளிக்க சென்னை மாநகராட்சி சார்பாக கவுன்சிலிங் மையம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கரோனா வைரஸ் பெருந்தொற்று அறிகுறிகள் தென்பட்டு முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு தேவையான மனவள, உடல்நல ஆலோசனைகளை வழங்கி நெருக்கடியில் உள்ள நபர்களுக்கு உதவி வருகின்றனர்.

Loyola College with Government
அரசுடன் கைக்கோர்த்துள்ள லயோலா கல்லூரி

இந்தப் பணியில், சென்னை மாநகராட்சி மருத்துவர்களுடன் சென்னை லயோலா கல்லூரி தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றிவருகின்றனர். கரோனா வைரஸ் கவுன்சிலிங் மையத்தில் ஒரு வாரத்தில் 22,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளை அவர்கள் கையாண்டுள்ளனர். இந்தஅலுவலகம் மூலம் சென்னையில் தமது வீடுகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 24,000 பேருக்கு ஆலோசனைகளும் ஆறுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

Loyola College with Government
லயோலா கல்லூரி

இந்நிலையில் கவுன்சிலிங் மையத்தை ஆய்வு செய்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்த கவுன்சிலிங் மையம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தார். மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருப்பூர் ஆணையர்கள் இதேபோன்ற மையங்களை அமைக்க லயோலா நிர்வாகத்தை அணுகி உள்ளது கவனித்தக்கது.

இதையும் படிங்க : விவசாயிகள் கொள்முதல் செய்யும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.