சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் தேவநேசன் நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர்கள் முருகன், மலர் தம்பதி. இவர்களுடைய மகன் பிரபாகரன் (20). இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
இன்று (அக.30) கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வண்டலூர் அருகே லாரி மோதி பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஓட்டேரி காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வலையங்குளத்தில் சாலையைக் கடக்க முயன்ற மாணவி லாரி மோதி உயிரிழப்பு!