ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலும் பதவியேற்பு பரிதாபங்களும்...!

தமிழ்நாடு: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழாவில் திமுக, அதிமுக-வினர் இடையே அடிதடி, தோல்வி பெற்ற நபர் பதவியேற்றது உள்ளிட்ட பல்வேறு களேபரங்கள் நடந்தன.

local body election
local body election
author img

By

Published : Jan 8, 2020, 10:55 AM IST

குலுக்கல் முறையில் வெற்றியை தவறவிட்ட பரிதாபம்

விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சி 15 வார்டுகளை கொண்டது. இதியில் 8ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சரவணன், ராமமூர்த்தி ஆகியோர் தலா 183 வாக்குகள் பெற்றிருந்தனர். அதனால், குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்யலாம் என்றும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், குலுக்கல் நடத்தாமல் சரவணன் வெற்றிபெற்றதாக அறிவித்து, சான்றிதழ் வழங்கினர். மேலும், கூரைக்குண்டு ஊராட்சியில் நேற்று காலை முறைப்படி ஆவணத்தில் கையெழுத்திட்டு சரவணன் பொறுப்பேற்றுள்ளார். இதையறிந்த மாற்றுக் கட்சி வேட்பாளர் ராமமூர்த்தி, அவரது ஆதரவாளர்கள் குலுக்கல் நடத்தாமல் எவ்வாறு ஒருதலைபட்சமாக வெற்றிபெற்றதாக ஒருவரை அறிவிக்கலாம் எனக்கூறி முற்றுகையிட்டனர். அப்போது, தேர்தல் அலுவலர் விடுமுறை என்பதால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரை பார்க்குமாறு அலுவலர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர்

இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் ராமமூர்த்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதைத் தடுத்த காவல்துறையினருக்கும் ராமமூர்த்தி தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் மறியல் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர், ராமமூர்த்தி தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.

சேர்மன் பதவியை தேர்ந்தெடுப்பதில் மோதல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 15 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தேர்தலில் அதிமுக - 7, திமுக - 6, பாஜக மற்றும் சுயேட்சை தலா ஒருவரும் வெற்றி பெற்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி 8 ஒன்றியக் குழு உறுப்பினர்களும் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரும் சேர்ந்து ஒன்றியக்குழு சேர்மன் பதவியை கைப்பற்றியது.

தஞ்சாவூர்

அதிமுக ஒன்றிய செயலாளர் துரை மாணிக்கம் சேர்மன் பதவியை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்து, எம்எல்ஏ தரப்பு ஆதரவாளர் ஒருவருக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆதரவாளர்களுக்கும் அதிமுக ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஜெயித்தது ஜெயலட்சுமி! வெற்றி சான்றிதழ் பெற்றது விஜயலட்சுமி..!

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, குமளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார். இதில் 1,710 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலட்சுமி வெற்றிபெற்றிருந்தார். ஆனால்,"விஜயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் வெற்றிபெற்றார்” என்று தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி, அலுவலர்களிடம் முறையிட்டார்.

கடலூர்

ஊராட்சி மன்றத் தலைராக விஜயலட்சுமி பதவியேற்பை எதிர்த்து ஆதரவாளர்களுடன் ஜெயலட்சுமி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் விஜயலட்சுமி பதவி ஏற்காமல் திரும்பிச் சென்றார். வளர்ச்சி வட்டார அலுவலர் சுப்பிரமணி, தேதி குறிப்பிடாமல் பதவியேற்பு விழாவை ஒத்தி வைத்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர். "நாங்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தது ஜெயலட்சுமிதான். அவரை தவிர வேறு யாரையும் பதவி ஏற்க விடமாட்டோம். விஜயலட்சுமி பதவியேற்க வந்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தனர்.

மன்னார்குடியில் திமுக - அதிமுக இடையே தள்ளுமுள்ளு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 22 பேரின் பதவியேற்பு விழா, நேற்று முன் தினம் (ஜன. 06) காலை 10 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் 10:30 மணிக்குள் பதவி ஏற்றனர். அதன் பிறகு வந்த திமுக உறுப்பினர்கள் பதவியேற்க சென்றனர். அவர்களை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி, பதவியேற்கவோ, கையொப்பம் இடவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டிஎஸ்பி கார்த்தி தலைமையில் காவல்துறையினர் அதிமுக-வினரை மட்டும் அலுவலகத்தில் அமர வைத்து விட்டு திமுகவினரை வெளியேற்றியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதவியேற்பு விழாவில் அதிமுக, திமுக காவல்துறையினர் தள்ளுமுள்ளுவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர்

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!

Intro:விருதுநகர்
06-01-2020

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் ஒட்டு எண்ணிக்கை சமமாக இருந்தும் ஒரு தரப்புக்கு சாதகமாக வெற்றி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியல்

Tn_vnr_08_road_block_vis_script_7204885Body:கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் ஒட்டு எண்ணிக்கை சமமாக இருந்தும் ஒரு தரப்புக்கு சாதகமாக வெற்றி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மற்றொரு வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி செய்ததை தொடர்ந்து போலிசாருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாமல் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் சாலை மறியல்

விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சி 15 வார்டுகளை கொண்டது இதியில் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், ராமமூர்த்தி மற்றும் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் சரவணன், ராமமூர்த்தி இருவரும் தலா 183 வாக்குகள் பெற்றிருந்தனர்.
குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், குலுக்கல் நடத்தாமல் சரவணன் வெற்றிபெற்றதாக அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கூரைக்குண்டு ஊராட்சியில் இன்று காலை முறைப்படி ஆவணத்தில் கையெழுத்தி பொறுப்பேற்றுள்ளார். இதையறிந்த வேட்பாளர் ராமமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குலுக்கல் நடத்தாமல் எவ்வாறு ஒருதலை பட்சமாக வெற்றிபெற்றதாக ஒருவரை அறிவிக்கலாம் எனக் கூறி முற்றுகையிட்டனர். அப்போது, தேர்தல் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் விடுமுறை என்பதால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரை பார்க்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் ராமமூர்த்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார் அதை அறிந்த போலீஸார் மண்ணெண்ணெய் கேனை பறித்துச் சென்றனர். அப்போது, போலீஸாருக்கும் வேட்பாளர் ராமமூர்த்தி தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஊராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர் குறித்து ஒருதலைப் பட்சமாக வெற்றி அறிவிப்பு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் நவாஸ் காஜா காஜா மைதீன் உரிய விளக்கம் அளிக்க முன்வரவில்லை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது ஆத்திரமடைந்த அவர்கள் விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்து அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நாளை சம்பந்தப்பட்ட அதிகாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.