தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து 315 மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகின்றன. இப்பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆணையர் பழனிசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர்.
91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு நடைபெற்ற இரண்டு கட்டத் தேர்தல், மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட அனைத்து மாவட்டங்களில் செலுத்தப்பட்ட வாக்குகளும், இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் குறித்த விவரங்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: முகவர்கள் அனுமதிப்பதில் முறைகேடு: ஆளும் கட்சியினர் சாலை மறியல்