ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் இன்று ஆலோசனை - கே.எஸ்.அழகிரி - Tamil Nadu Congress leader KS Alagiri

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது.

-congress
author img

By

Published : Nov 17, 2019, 8:53 AM IST

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ' யார் ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ அவர்கள் செய்கிற குற்றங்களைத் தான் பொது மக்கள் சிந்தித்துப் பார்ப்பார்கள். ஆளும் கட்சியாக இல்லாதவர்கள் மீது குற்றம் சுமத்துவது என்பது முறையும் அல்ல. அதிமுக மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, கேள்விக்கு திருப்பி பதில் கேள்வி கேட்கக்கூடாது.' என்று கூறினார்.

'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்துமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்படும்' என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

தொடர்ந்து பேசிய அவர், 'ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமா தற்கொலை குறித்து விசாரணை நடப்பதால் அதிகமாக பதில் சொல்ல முடியாது. ஐ.ஐ.டி.யில் இதுவரை 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றால், உண்மையில் ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது? தற்கொலை செய்யத் தூண்டப்படுகிறார்களா? என்று தான் விவாதிக்க வேண்டிய நிலை உள்ளது. இது சம்பந்தமாக கல்வியாளர்கள் கவலையுடன் அக்கறை கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: பொது இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய அரசு முன்வர வேண்டும் - தொல். திருமாவளவன்!

Intro:உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் கே.எஸ்.அழகிரி பேட்டிBody:உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் கே.எஸ்.அழகிரி பேட்டி

யாராக ஆளும்கட்சியாக இருக்கிறார்களோ அவர்களின் குற்றங்களை பொது மக்கள் சந்தித்து பார்ப்பார்கள். ஆளும் கட்சியாக இல்லாதவர்கள் மீது குற்றம் சுமத்துவது முறையும் அல்ல. அதிமுக மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர கேள்விக்கு திருப்பி கேள்வி கேட்க கூடாது. ஆளும்கட்சியாக இருப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் ஜனநாயகத்தின் மாண்பு. சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வியை தான் கேட்பார்கள். ஆளும்கட்சி தரப்பு பதில் சொல்ல வேண்டும். நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம். நாங்கள் கேள்வி கேட்கிறோம் என்று சொல்ல கூடாது. அதிமுக மீதான குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை கூடுகிறது. அந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது, உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்துமா அதற்கான சாத்தியகூறுகள் உள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்படும்.

ஆளும் அரசாக இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் தாக்கீது அனுப்பலாம். ப.சிதம்பரம் 89 நாட்களாக சிறையில் விசாரணை கைதி என்ற பெயரில் உள்ளார். பா.ஜ.க., அதிமுக போன்ற அரசுகள் யார் மீதும் எந்தவிதமான நோட்டீசும் அனுப்பலாம். இதற்காக பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை குறித்து விசாரணை நடப்பதால் அதிகமாக பதில் சொல்ல முடியாது. ஐ.ஐ.டி.யில் இதுவரை 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றால் உண்மையில் ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது. படிக்கின்ற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாத போக்கு அங்கு நிலவுகிறது. எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்ய தூண்டப்படுகிறதா அச்சத்தில் உள்ளனரா மாணவர்களுக்கு நெருக்கடி இருக்கிறதா என்று தான் விவாதிக்க வேண்டிய நிலை உள்ளது. இது சம்பந்தமாக கல்வியாளர்கள் கவலையுடன் அக்கறை கொள்ள வேண்டும்.

பாரதி போன்றவர்கள் துணிவை ஊட்டிய தேசத்தில் உயர்கல்வி தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை பற்றி ஆராய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.