எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினர் அடிப்படை உரிமைகளை மீட்கும் விதமாக 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை கண்டிக்கும் விதமாகவும் நடத்தப்பட்டது. எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தின் முக்கிய பேரணியாக கருதப்படும் இந்த பேரணி நடந்து, இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள ஆதித்தனார் சாலை தொடங்கி லாங்ஸ் கார்டன் சாலை வரை எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினர் வானவில் சுயமரியாதை பேரணி சென்றனர். இதேபோல் குஜராத் மாநிலம் வதோதராவிலும் எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினர் பேரணியில் கலந்து கொண்டனர்.