தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப் பதிவு செய்வதற்காக, தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்தது.
இதன்படி நேற்றைய (ஏப்ரல் 02) தினம் வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளில், 1650 பேருந்துகளும், 170 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.
அதுபோல இன்று (ஏப்ரல் 03) அதிகாலை நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளும், 375 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் இதுவரை மட்டும் மொத்தமாக 5,035 பேருந்துகளில் 2,01,400, பயணிகள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரையில் 37,275 பயணிகள் முன்பதிவும் செய்துள்ளதாகப் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'ஈ'க்கள் இம்சையால் தேர்தலைப் புறக்கணிக்கும் மக்கள்!