தமிழ்நாட்டில் காரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது, வார நாள்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தமிழ்நாட்டில் விதிக்கப்பட்டு தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற 31ஆம் தேதி வரை விடுமுறை நேரடி வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதே வேளையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது ஜன.31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : சென்னையில் கரோனா தாக்கம் குறைகிறது - செயலாளர் ராதாகிருஷ்ணன்