ETV Bharat / state

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்: கர்நாடகா அரசு அறிவிப்பு! - ஜெயலலிதா சசிகலா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக வழக்கறிஞரை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

Jayalaitha
ஜெயலலிதா
author img

By

Published : Apr 7, 2023, 4:08 PM IST

பெங்களூரு: தமிழ்நாட்டில் 1991ம் ஆண்டு முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. 4 பேரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துக்களை சேர்த்தது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்ட நிலையில், தனி நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பு அளித்த தனி நீதிமன்றம், 4 பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சிறை தண்டனை உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், கர்நாடகா அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை 2017ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், தனி நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என அறிவித்தது.

இந்த தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டதால் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனைக் காலம் முடிவடைந்த பின் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி, பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட, நீதித்துறை சார்பில் வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: போக்குவரத்தில் பல்வேறு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.