ETV Bharat / state

'இனியும் சும்மா இருக்க மாட்டேன்' - சசிகலாவின் நியூ ஆடியோ

தான் அரசியலுக்கு வந்தால்தான் நல்லது எனத் தொண்டர்கள் கூறுகின்றனர். அதனால் இனியும் சும்மா இருக்க மாட்டேன் என்று தொண்டர் ஒருவருடன் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 14, 2021, 5:18 PM IST

சசிகலாவின் நியூ ஆடியோ
சசிகலாவின் நியூ ஆடியோ

சென்னை: சசிகலா தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடும் புதிய ஆடியோக்கள் வெளியாகியுள்ளது. தொண்டர் ஒருவரிடம் உரையாடிய சசிகலா, "அதிமுக ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால் கண்டிப்பாக வெற்றிபெற்றிருப்போம், அவர்கள் தனித்திருந்ததால் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

'நானாக தான் ஒதுங்கியிருந்தேன்'

மற்றொரு ஆடியோவில், "கட்சியின் விதியின்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும், அரசியலிலிருந்து என்னை விலகியிருக்க யாரும் நிர்பந்திக்கவில்லை, நானாகத்தான் ஒதுங்கியிருந்தேன். அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான்" எனப் பேசியுள்ளார்.

சசிகலா, ஜெயலலிதா
சசிகலா, ஜெயலலிதா

'நிச்சயம் வருகிறேன்'

மேலும் ஒருவரிடம் பேசியிருந்த ஆடியோவில், "இனிமே இந்தக் கட்சி (அதிமுக) வீணாகிறத பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். நீங்க வந்தாதான் நல்லதுன்னு தொண்டர்கள் சொல்லீட்டாங்க. நிச்சயம் வர்றேன்" என்று தெரிவித்திருப்பார். கடந்த சில நாள்களாகவே தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக சசிகலா பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவருகின்றன.

அதிமுக கலக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது தொண்டர்களுடன் பேசிவருவதால், அரசியலில் அவர் ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.

சசிகலா
சசிகலா

இது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுகவினர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றினர். மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக உறுப்பினர்கள் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'விரைவில் சசிகலா தலைமையில் அதிமுக இயங்கும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.