சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளங்கலை படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்வதற்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜூலை 26ஆம் தேதி முதல் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. www.tngasa.in, www.tngasa.in என்கிற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தற்போதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை கால நீட்டிப்பு