ETV Bharat / state

கிரானைட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக 4 வாரத்தில் முடிவு எடுக்க மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு கெடு! - மதுரை சிறப்பு நீதிமன்றம்

கிரானைட் முறைகேடு தொடர்பாக 180 பேருக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

granite
கோப்புபடம்
author img

By

Published : Jun 18, 2023, 7:38 AM IST

சென்னை: மதுரை மாவட்டத்தில் கிரானைட் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவதாக புகார் வந்தது. உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்துக்கு 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. அவர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் அரசு புறம்போக்கு நிலத்திலிருந்து 16 ஆயிரத்து 338 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அரசுக்கு தோராயமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மேலும் சுரங்கத் துறை துணை இயக்குநர் மற்றும் மூன்று உதவி இயக்குநர்கள் அடங்கிய குழு அறிக்கை ஒன்றை அளித்தது. அதில் மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள நவினிபட்டி, கீழ வளவு, திருவத்தூர் உள்ளிட்ட இடங்களில், 124 அரசு புறம்போக்கு நிலங்களில், 25 ஆயிரத்து 321 பிளாக் கிரானைட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்த கிரானைட்களை ஏலம் விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து பி.ஆர்.பி. கிரானைட், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், விஜயா கிரானைட்ஸ், முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குத் தற்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நிறுவனங்கள் தரப்பில், கிரானைட் முறைகேடு வழக்கில் தங்கள் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாலும் கிரானைட்கள் மீதான உரிமையை எங்களால் கோர முடியவில்லை எனத் தெரிவித்தனர். தோண்டி எடுக்கப்பட்ட குழிகளை நிரப்புவதற்காக விற்க முடியாத கிரானைட் கற்கள், கழிவுகள், நிராகரிக்கப்பட்ட கிரானைட்கள் ஆகியவை தேவைப்படும் என்பதால் அவை ஏலமிடப்படும் என்கிற அறிவிப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கிரானைட் நிறுவனங்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தில் புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள் தொடர்ந்து மதிப்பிழந்து வருவதால் அவற்றை ஏலமிட முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அப்படியே வைத்திருந்தால் அரசுக்குதான் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அவற்றை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை சம்பந்தப்பட்ட வழக்கின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஏற்கனவே 180 பேருக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளதை சுட்டிக்காட்டி கனிம வள சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலமிடுவது அல்லது விற்பது தொடர்பான விசாரணையை மதுரை சிறப்பு நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள விற்கமுடியாத கிரானைட் மற்றும் கிரானைட் கழிவுகள் மேலும் நிராகரிக்கப்பட்ட கிரானைட் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பாக 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்துவைத்தார்.மேலும், கிரானைட் முறைகேடு தொடர்பாக 180 பேருக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு ஆர்வமில்லையா? நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.