ETV Bharat / state

கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருடிய நபர் - கிரெடிட் கார்ட்

சென்னையில் கிரெடிட் கார்டு மோசடி மூலம் ரூ.1லட்சத்து 55 ஆயிரம் பணத்தை திருடிய அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிரெடிட் கார்ட் மோசடியில் ரூ.1 லட்சத்தி 55 ஆயிரம் திருடிய மர்ம நபர்

author img

By

Published : Mar 23, 2022, 10:52 PM IST

சென்னை: திருவொற்றியூர் ஜீவரத்தினம்பாள் நகரைச் சேர்ந்தவர் ஹேமா புஷன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் ஹேமாபுஷனைத் தொடர்புகொண்டு, தனது பெயர் விஜய் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

கிரெடிட் கார்டு மோசடி

தொடர்ந்து பேசிய அந்த நபர் தங்களுடைய எஸ்பிஐ கிரெடிட் கார்டு எண்ணிற்கு வருடாந்திரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்து, கடன் வரம்பை உயர்த்தி வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனால் ஹேமாபுஷன் பான் கார்டு, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு எண்களை அந்த நபரிடம் தெரிவித்துள்ளார். எண்களைத் தெரிவித்த சிறிது நேரத்திலேயே ஹேமாபுஷன் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வங்கிக்கணக்கிலிருந்தும், கோட்டாக் கிரெடிட் கார்டு வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 425 ரொக்கப் பணம் மாயமாகி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமாபுஷன், இந்த மோசடி குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஹேமா புஷனை தொடர்புகொண்டு பேசிய தொலைபேசி எண்ணை வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.