திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் பத்மஜா. இவரும் இவரது கணவர் பவனும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், சமீபத்தில் பவன் ஆந்திர மாநிலம் நெல்லூரில் குடியேறியுள்ளார்.
பத்மஜா திருவொற்றியூரில் தனியே வசித்து வந்த நிலையில், நேற்று மாலை முதல் இவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இன்று காலை வரை தொடர்ந்து வீடு பூட்டப்பட்டு இருந்ததை கவனித்த அவ்வீட்டின் உரிமையாளர் காசிநாதன், கதவைத் தட்டி சோதித்துள்ளார்.
தொடர்ந்து தட்டியும் கதவு திறக்கப்படாதை அடுத்து, திருவொற்றியூர் காவல்துறைக்கு அவர் தகவலளித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கதவைத் தள்ளி திறந்தபோது பத்மஜா மின் விசிறியில், துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பத்மஜாவின் கணவர் பவனுக்கு தகவல் தெரிவித்த காவல் துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!