சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப் 23) தாக்கல் செய்தார். இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்- இல் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள புதிய ஆட்சிக்கு கடன் சுமையாக 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து விட்டு செல்வது தான் அதிமுக அரசின் சாதனையாக இருக்க முடியும் என விமர்சித்துள்ளார்.