சென்னை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா தொற்று பரவியது முதல் அதை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தெளிவற்ற கொள்கைகளை பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது. தடுப்பூசி அளிப்பதில் இதுவரை மூன்றுவிதமான கொள்கைகளை அறிவித்துள்ளது. தொடக்கத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கிற முதன்மை பொறுப்பு ஒன்றிய அரசுக்குதான் இருக்கிறது என பல முறை தெரிவித்தது.
ஆனால், பாஜக அரசு அந்த பொறுப்பை மாநில அரசின் தலையில் சுமத்திவிட்டு அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டது. அதற்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக மாநில அரசுகளுக்கு தேவைப்படுகின்ற தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. அதிலும், பாரபட்சமாகவே பாஜக அரசு செயல்படுகிறது.
7.88 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான 6.48 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், 2 கோடியே 58 லட்சத்து 68 ஆயிரத்து 770 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சமான அணுகுமுறையை பிரதமர் மோடி கடைபிடிப்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும் குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக செயல்படாமல், அனைத்து மாநிலங்களையும் சமமாக அணுகும் பிரதமராக மோடி செயல்பட்டால் மட்டுமே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்!