ETV Bharat / state

வருமானவரி சோதனை மூலம் திமுகவை முடக்க நினைக்கும் பாஜக - கே.எஸ். அழகிரி - திமுகவினர் வீடுகளில் வருமான வரி சோதனை

தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் கடைசி ஆயுதமாக வருமானவரித் துறையை பாஜக பயன்படுத்திவருகிறது. இதன்மூலம் திமுகவை முடக்கிவிடலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி
author img

By

Published : Apr 2, 2021, 2:18 PM IST

சென்னை: திமுகவைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் நடைபெறும் வருமானவரி சோதனைகள் உள்நோக்கத்துடன் நடத்தப்படுவதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில், கடைசி ஆயுதமாக வருமானவரித் துறையை பாஜக அரசு பயன்படுத்திவருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இதன்மூலம் பாஜகவை முடக்கிவிடலாம் என பாஜக கனவு காண்கிறது.

கே.எஸ் அழகிரி அறிக்கை
கே.எஸ் அழகிரி அறிக்கை

இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கிற பேராண்மை மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சிகளுக்கு இருக்கிறது. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிற வருமானவரித் துறை சோதனைகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.